திருமுறை விளக்கம் > திருநாவுக்கரசர் தேவாரம
          
 

 

திருமருகல்

 

பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்

திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்

பருகலாம் பரம் ஆயது ஓர் ஆனந்தம்

மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே

   
 

விளக்கம்:

திருமருகலில் எழுந்தளியுள்ள இறைவரின் திருவடிகளை வாழ்த்தி வணங்கினால் தவம் பெருகலாம்; அறியாமை நீங்கப்பெறலாம்; மாறுபட்டதாகிய சிந்தை திருத்தலாம்; கடவுண்மயமாகிய ஒப்பற்ற மேலான பேரானந்தத்தைப் பருகலாம்.

 

 

 

 

 

 

<Back to Saivam>