| |
விளக்கம்:
திருந்துதேவன்குடியில்
வீற்றிருக்கும்,
தேவர்கட்கெல்லாம்
தேவனாக
விளங்குபவனும்,
அருந்தவத்தோர்களால்
தொழப்படுபவனுமான
சிவபெருமானின்
திருவேடங்கள்
(திருநீறு,
உருத்திராக்கம்,
சடாமுடி)
மருந்து
வேண்டுபவர்க்கு
மருந்தாகவும்,
மந்திரங்கள்
விரும்புவார்கட்கு
மந்திரமாகவும்,
சிவபுண்ணியச்
சரிதை
கேட்க
விருபுவார்கட்கு
அப்புண்ணியப்
பயனாகவும்
அமையும். |