திருக்குறுந்தொகை
அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே
விளக்கம்:
பேரின்பவீடு நல்கும் தில்லை திருசிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு பரமுத்தி பேரின்ப நிலையை எளிதின் எய்துவதற்கு இந்த நல்ல மனித பிறவியை இன்னும் கொடுக்குமோ முதல்வன்?
<Back to Saivam>