| |
அறத்துப்பால்
>
கடவுள் வாழ்த்து |
| |
|
|
|
|
| |
|
குறள்
1 |
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி
பகவன் முதற்றே உலகு |
|
| |
|
விளக்கம் |
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக
கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக
கொண்டிருக்கிறது. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
2 |
கற்றதனால் ஆய பயனென்கொல்
வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் |
|
| |
|
விளக்கம் |
தூய அறிவு
வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல்
இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
3 |
மலர்மிசை ஏகினான் மாணடி
சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் |
|
| |
|
விளக்கம் |
அன்பரின்
அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த
திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில்
நிலைத்து வாழ்வார். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
4 |
வேண்டுதல் வேண்டாமை இலானடி
சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல |
|
| |
|
விளக்கம் |
விருப்பு
வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி
நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம்
இல்லை. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
5 |
இருள்சேர்
இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு |
|
| |
|
விளக்கம் |
கடவுளின் உண்மைப் புகழை
விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால்
விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
6 |
பொறிவாயில் ஐந்தவித்தான்
பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் |
|
| |
|
விளக்கம் |
ஐம்பொறி
வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய
பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற
நல்வாழ்க்கை வாழ்வர். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
7 |
தனக்குவமை இல்லாதான்
தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது |
|
| |
|
விளக்கம் |
தனக்கு
ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை
மாற்ற முடியாது. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
8 |
அறவாழி அந்தணன்
தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது |
|
| |
|
விளக்கம் |
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும்
இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
9 |
கோளில் பொறியின் குணமிலவே
எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை |
|
| |
|
விளக்கம் |
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய
கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
10 |
பிறவிப் பெருங்கடல்
நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் |
|
| |
|
விளக்கம் |
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்
பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர்
கடக்க முடியாது. |
|
| |
|
|
|
|
| |
|
|
|
|
| |
<Back
to Saivam> |