புதிய கேள்விகள் - 2/2/2009 :

 
         
கேள்வி :

பன்னிரு திருமுறைகளில் சாத்திரப் பாடல்களாக உள்ளது எது?

 
  பதில் :

10-ஆம்  திருமுறை / திருமந்திரம்.

 
         
கேள்வி :

திருத்தொண்டர் தொகையை அருளியவர் யார்?

 
  பதில் :

சுந்தர மூர்த்தி நாயனார்.

 
         
கேள்வி :

சங்கத்தமிழ் புலவரான நக்கீரர் இயற்றிய நூல் எது?

 
  பதில் : திருமுருகாற்றுப்படை  
         
கேள்வி :

நினைக்க முக்தி தரும் கோவில் எது?

 
  பதில் :

திருவண்ணாமலை

 
         
கேள்வி :

சிவபெருமான் யாருக்காக காலனைக் காலால் உதைத்தார்?

 
  பதில் :

மார்கண்டேயர்

 
         
கேள்வி :

சிவாலயத்தில் சதா யோக நிலையில் இருக்கும் மூர்த்தி யார்?

 
  பதில் :

சண்டிகேசுவரர்

 
         
கேள்வி : 'சங்கர்ப்ப நிராகரணம' எனும் சாத்திர நூலை அருளியவர் யார்?  
  பதில் :

உமாபதி சிவம்

 
         
கேள்வி :

சனகாதி முனிவர்கள் யார்?

 
  பதில் :

சனகர், சனாதனர், சனந்தனர் & சனற்குமாரர்

 
         
கேள்வி :

63 நாயன்மார்களுடைய கதைகளைக் திருமுறையில் எந்த பகுதியில் காண முடிகிறது?

 
  பதில் :

12-ஆம் திருமுறை / பெரிய புராணம்

 
         
கேள்வி :

கோவிலை ஏன் வலது புறமாக வலம் வருகிறோம்?

 
  பதில் :

பூமி வலது புறமாக சுழழுவதால், கோவிலை வலது புறமாக வலம் வருகிறோம்.

 
         
கேள்வி :

வீட்டில் திருவிளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம் யாது?

 
  பதில் :

'இல்லக விளக்கது' எனும் தமிழ் மந்திரத்தை ஓதியவாரே விளக்கு ஏற்ற வேண்டும். அல்லது 'நமசிவய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியும் விளக்கு ஏற்றலாம்.

 
         
கேள்வி :

முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் யாவை?

 
  பதில் :

பழநி, சுவாமி மலை, பழமுதிச் சோலை, திருத்தணிகை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம்

 
         
கேள்வி :

மரங்கள், பாம்பு, புற்று போன்றவற்றை இறைவனாக வழிபட முடியுமா?

 
  பதில் :

முடியாது. கரு, விதை, கிழங்கு & வியர்வையில் இருந்து தோன்றுவன இறைவனாகாது.

 
         
கேள்வி :

சிறு தெய்வத்திற்கும் பரம்பொருளுக்கும் என்ன வேறுபாடு?

 
  பதில் :

சிறு தெய்வங்கள் நம்மைப் போன்ற உயிரினத்தைச் சார்ந்தவை. அவை பிறக்கும், இறக்கும், மேல் வினைகள் செய்யும். உயிர்களின் வினையை ஒடுக்கி பிறவா நிலையைக் கொடுக்கும் ஆற்றல் அற்றது. பரம்பொருள் பிறப்பு, இறப்பு, வினை என்ற யாவற்றையும் கடந்து சத்சித் ஆனந்தமாய் சிறப்பு நிலையில் இருப்பது. உயிர்களின் வினைகளை ஒடுக்கி பிறவா நிலையைக் கொடுப்பது.

 
         
கேள்வி :

பேய்கள் உண்டு என்றும் இல்லை என்றும் கூறுகிறார்கள். சைவ சமயம் என்ன கூறுகிறது?

 
  பதில் :

பேய்கள் உண்டு. இறந்து அடுத்த பிறவிக்குச் செல்லும் முன் சில காலம் உயிர் நுண் உடலில் தங்கி இருக்கும். அந்த நிலையில் உயிர்கள் பேய்கள் அல்லது ஆவிகள் என்று சொல்லப் படுகின்றன.

 
         
  கேள்வி :

வீட்டில் சுவாமி அறையை எந்தப் பக்கம் வைக்கலாம்?

 
  பதில் :

இறைவன் திருவுருவங்கள் கிழக்கு நோக்கி இருக்கும் படி அமைத்துக் கொள்ளலாம். அறை இல்லை என்றால் இருக்கும் அறையில் பொருத்தமான இடத்தில் பூசை மேடையை அமைத்துக் கொள்ளலாம்.

 
         
கேள்வி :

இறந்தவர்களுக்கு ஆண்டு தோறும் திவசம் செய்ய வேண்டுமா?

 
  பதில் :

செய்ய வேண்டியது இல்லை. அன்றைய தினம் அவர்களை நினைவு கூறும் வகையில் அவர்கள் பெயரால் நற்செயல்கள் செய்யலாம். திவச கிரியா பலன்கள் இறந்தவர்களைச் சென்று சேர்வதில்லை.

 
         
கேள்வி :

கனவில் திருமணத்தைப் பார்த்தாள் இறப்பு வரும் என்கிறார்களே அது உண்மையா?

 
  பதில் :

உண்மை இல்லை. சித்தத்தில் பதிவாகி கிடக்கும் எண்ணங்கள் வெளிப்படும் போது கனவாக உணரபடுகின்றன.

 
         
கேள்வி :

தமிழர் சமயம் என்பது எது?

 
  பதில் :

சைவ சமயம்

 
         
கேள்வி :

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?

 
  பதில் :

--சி-- அல்லது சி----

 
         
கேள்வி :

முன் ஜென்மத்தின் வினை இராசிக்கற்கள் அணிந்துக் கொள்வதால் போய்விடுமா?

 
  பதில் :

போகாது. வினைகளைத் தீர்க்கவும் புதிய வினைகள் வராமல் தடுக்கவும் இறை வழிபாடு ஒன்றே வழி.

 
         
கேள்வி :

இந்து சமயத்தில் புராணக் கதைகள் பல இருக்கின்றன, அவற்றை நம்பலாமா?

 
  பதில் :

அரிய கருத்துகளைப் பாமரர்களும் புரிந்துக் கொள்ளும் வகையில் கூறப்பட்டதே புராணக் கதைகள். புராணங்களைப் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 
         
கேள்வி :

சிவபுராணத்தில் 'கல்லாய் மனிதராய் பேயாய்' என்று வருகிறது. புல் முதலிய பல பிறவிகள் பற்றிக் கூறும் மணிவாசகர், 'கல்லாய்' என்றும் சொல்கிறார், 'கல்' பிறப்பா?

 
  பதில் :

ஒவ்வொரு பிறவிகளிலும் உயிர் பல வகையான உடம்புகளைத் தமக்கு இடமாய் கொள்வது போல கல்லையும் தமக்கு இடமாய் கொள்ளும். கல் அசையாமல் கிடக்கும். அதன் உள்ளே உள்ள உயிர்களும் அசைவு இன்றிச் செயலற்றுக் கிடக்கும். இந்நிலையைக் கல்லாய் என்று மணிவாசகர் குறிக்கின்றார்.

 
         
கேள்வி :

பகவத்கீதையை இந்து சமயத்தின் பொது நூல் என்று சொல்வது சரியா?

 
  பதில் :

இந்திய சமயங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவை. இச்சமயங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே நூல்கள் உள்ளன. பகவத்கீதையை இந்து சமயத்தின் பொது நூல் என்று சொல்வது பொருத்தமாகாது.

 
         
கேள்வி :

நம் சமயம் எதற்கெடுத்தாலும் 'அது அவன் வினைப்பயன்' என்கிறது. மனிதனின் முயற்சிக்கு இடம் இல்லையா?

 
  பதில் :

திருவருளின் துணைக் கொண்டு உயிர்கள் முயற்சிகள் செய்கின்றன. உயிர்களின் அறிவு, இச்சை, செயலுக்கு உட்பட்டே வினைகளும் இறைவனால் செர்ப்பிக்கப்படுகின்றது.

 
         
கேள்வி :

முருகன் கோவிலில் அனுமானை வைத்து வழிபடலாமா?

 
  பதில் :

வழிபடக்கூடாது. அனுமான் ராம அடியார். அவரை இராமர் கோவிலில் வைத்து வழிபடுவதுதான் முறையாகும்.

 
         
கேள்வி :

சிவனை நேரில் கண்டவர்கள் உண்டா? அவர்கள் யாவர்?

 
  பதில் :

உண்டு. 63 நாயன்மார்கள்.

 
         
கேள்வி :

"தாண்டக வேந்தர்" என  சேக்கிழாரால் புகழாரம் சூட்டப்பட்டவர் யார்?

 
  பதில் :

திருநாவுக்கரசர் / அப்பர்

 
         
கேள்வி :

'சச்சிதானந்தம்' எதனை உணர்த்துகிறது?

 
  பதில் :

சக்தியோடு சேர்ந்திருக்கும் இறைவன், தன்னளவில் எவ்வித மாற்றமும் இன்றி முழு அறிவோடும் பேரானந்தமும் உடையவராக இருக்கிறார்.

 
         
கேள்வி :

ஞானப் பெருவெளி அல்லது அறிவுப் பெருங்கடலாக விளங்கும் திருத்தலம் எது?

 
  பதில் :

தில்லை சிதம்பரம்

 
         
கேள்வி :

இறைவன் செய்த எட்டு (8) வீரச் செயல்களை என்னவென்று அழைப்போம்?

 
  பதில் :

அட்ட வீரட்டானம்

 
         
         

Printable version
 
 
 
 
         

[ 1 ] [ 2 ] [ 3 ] [ 4 ] [ 5 ] [ 6 ] [ 7 ] [ 8 ] [ 9 ] [ 10 ] [ 11 ] [ 12 ]  [ 13 ]  [ 14 ]

 

Page 2 of 14